Saturday, December 6, 2008

அனுபவங்களின் கதை ( பயணம் 3)


இந்த மூன்றாம்பயணஅனுபவத்திலிருந்து ஒரு இளைஞனனுக்கான பயண அனுபவத்தின் மூலம் தொடர்கிறேன், எனது இலக்கியவட்டம் எங்கள் ஊர் நூலகபாதையினை நோக்கி சென்றது, அந்த காலங்களில் நூலகத்தில் உறுப்பினராக​சேர்வது என்பது மிகவும் அரிதான விஷயம், நூலக விண்ணப்பபடிவத்தில் யாராவது அரசாங்க அதிகாரியிடம் சென்று அறிமுககடிதம் வாங்கிவரவேண்டும், அதற்காக நானும் என் அண்ணன் ( எனது பெரியஅம்மாவின் மகன் ) ரமேஷ் இருவரும் நூலகதில் உறுப்பினராக சேர்வதற்காக அறிமுககடிதம் வாங்குவதற்கு பல இடங்கள் சுற்றினோம், ஆனால் எங்களுக்கு உடல்வலிதான் அதிகமாயிற்றே தவிர கடிதம் கிடைத்தபாடில்லை, கiடைசியில் எங்களுக்கு எங்கள் ஊர் காவல்துறை தலைமை ஆய்வாளரின் ஒப்புதல் கடிதம் கிடைத்தது, அந்த கடிதம் கிடைத்தநாளிலில் நாங்கள் இருவரும் அளவில்லா மகிழ்ச்சியடைந்ததோம், ஒரு வேலைகிடைத்த மகிழ்ச்சி, அந்நாள் முழுவதும் கூட மகிழ்ச்சி நீடிக்கவில்லை, காரணம் நாங்கள் கடிதம் வாங்க​சென்ற நாளில் எனது அண்ணனுக்கு அவருடைய அப்பா ( எனது ​பெரியப்பா) ஒரு வேலை​செய்ய​சொல்லியிருந்தாராம், ஆனால் என்னிடம் இந்த தகவலை அண்ணன் ​தெரிவிக்கவில்லை, நாங்கள் ஒப்புதல் கடிதம் வாங்கி வீட்டுக்குள் நுழைந்தவுடன் எங்களிடம் ஒரு​கேள்வி, எங்கு ஊரை சுற்ற சென்றிருந்தீர்கள், நாங்கள் இருவரும் கடிதம் வாங்க சென்ற விவரம் தெரிவித்தோம், உடன் எங்கள் ஒப்புதல் கடிதத்தினை வாங்கி அவர் கிழித்து எரிந்துவிட்டார், காரணம் அவர் சொன்ன வேலையினை நாங்கள் முடிக்கவில்லை, அன்று முழுவதும் நாங்கள் அடைந்த வருத்தத்திற்கு
அளவேயில்லை, அதன்பின் நான் என் முயற்ச்சியை கைவிடவில்லை, என் நண்பன் மூலமாக மிக எளிதில் மற்றுமொறு அதிகாரியிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி உறுப்பினராகிவிட்டேன், இந்த அனுபவத்தின் மூலம் முயன்றால் எதுவேண்டுமானலும் சாதிக்கலாம் என்பதினை கற்றுக்கொண்டேன். அனுபவங்கள்​தொடரும்........

1 comment:

Unknown said...

நூலகம் ஒன்றில் முதல் நாள் அனுபவம் என்பது முதல் முத்தத்தினை ஒத்தல்லவா.