Monday, November 24, 2008

அனுபவங்களின் கதை (பயணம் 2)


நான் எங்கள் ஊரில் மிகவும் பிரபலமாய் விளங்கும் பாரதிவித்யாலயா உயர்நிலைப்பள்ளி என்ற கல்விநிலையத்தில் படித்தேன். அந்த பள்ளி அனுபவத்தில் வாழ்க்கை ஆரம்பம் மற்றும் முடிவு ஆகியவற்றை கண்டிருக்கிறேன். எவ்வாறு என்ற கேள்விக்கு இதோ பதில், எங்கள் பள்ளியின் அருகில் ஒரு இடுகாடு ஒன்று உள்ளது, நான் தினமும் பள்ளிக்கு வீட்டைவிட்டு செல்லும்போது கடவுளை வணங்கிவிட்டு ​செல்லுமாறு என் அம்மா ​சொல்லுவார். சில நாட்கள் வணங்குவேன், சில நாட்கள் விளையாட்டாக சென்றுவிடுவேன், ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அநேகமாக வாரத்தில் 5 நாட்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் ஆண் பெண் என்ற வித்தியாசமின்றிஉயிரற்ற மனிதர்களை எங்கள் பள்ளியை தாண்டி அருகில் உள்ள இடுகாட்டிற்கு காலை மாலை இரண்டு​வேளைகளிலும் எடுத்து​கொண்டு​செல்வார்கள், சிலசமயம் நான் பள்ளிக்கு வரும்​போது உயிரற்ற மனிதர்களின் சடலங்கள் என்னை கடந்து செல்லும் , நான் கடவுளை வணங்குகிறேனோ இல்லையோ எங்களை கடந்து ​செல்லும் மனிதர்களின் ஆரம்பகால பயணத்தைவிட முடிவுறுகிற பயணத்தினை பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது. அதிலும் மிகவும் பணம் படைத்தவர்கள் அலங்கார பவனிவரை ஏழைகளின் மூங்கில் மட்டும் என்று பலவகைகளில் கண்டுள்ளேன், மனிதர்கள் இவற்றிலும் தங்களை​வேறுபடுத்தி காண்பிக்கிறார்கள், மிஞ்சுவது ஒன்றும் இல்லை. ​எனக்கு ஒரு முற்​போக்கான சிந்தனையும் உண்டு, ஊர்களில் மட்டுமல்ல நகரங்களிலும் நம் உறவினர்கள் மரணம் அடைந்துவிட்டாலோ அல்லது அந்த இல்லத்திற்கு சென்று பார்த்துவிட்டுவந்தாலோ உடனடியாக குளிக்க வேண்டும் என்று​பெரியவர்கள் சொல்வார்கள், அப்படி பார்த்தால் எங்கள் பள்ளி மாணவர்கள் தினமும் பள்ளிலேயே குளித்துவிட்டுதான் வகுப்பறைக்கு செல்லவேண்டும், முடியுமா? இதுதான் அந்த சிந்தனை. எங்களை​பொருத்தவரையில் அந்தநாளிலேயே இறப்பிற்கு அஞ்சாத மனதினை எங்கள் பள்ளியின் அருகில் உள்ள இடுகாட்டின் ஊர்வலங்களின் பவனி அனுபவம் மூலம்​தெரிந்து​கொண்டேன். அதுமட்டுமல்ல மரிக்கின்ற மனிதர்களோடு அன்றலர்ந்த மலர்களும் தங்கள் பயணத்தினை முடிப்பதுதான் உண்மையான தியாகம். அனுபவங்கள் ​மலரும்.............
சங்கமித்ரா

1 comment:

Unknown said...

மரணம் மனிதனுடன் எப்பொதும் இணைந்தே இருக்கிறது, நாம் கண்களை மூடிக்கொள்வதால் அது மறைந்துவிடப்போவதில்லை.