Thursday, November 20, 2008

அனுபவங்களின் கதை (பயணம் 1)


என்னை இந்த அனுபவங்களின்கதை தொடரினை இணையதளம் மூலம் எழுதுவதற்கு மானசீக தூண்டுகோலாக இருக்கும் என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய குழந்தைஉள்ளம்​கொண்டவருக்கு அனைத்து பயணங்களும் சமர்பணம்.
எனது முதல் பயணத்தினை எனது சொந்தநகரமான​சேலத்தில் இருந்து ​தொடங்குகிறேன். எனது பள்ளி பருவத்தில் எங்களது தெருவில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி தினம்தோறும் தலையில் தட்டு ஏந்தி பழங்களை விற்று வருவார்கள். எங்கள் இல்லத்தில் வைத்து முதல் வியாபாரம்​செய்துவிட்டுதான் தன்னுடைய அன்றைய விற்பனையை தொடங்குவார். அவ்வாறு விற்பனை நடக்கும் சமயங்களில் நான் என் அம்மாவிடம் அவர்​கேட்கும் விலையைவிட இரண்டு அல்லது மூன்று ரூபாய் அதிகம் கொடுத்து பழத்தினை வாங்குமாறு சொல்லுவேன். நான் அவ்வாறு சொல்வதன் காரணம் அவர் தினமும் கால்நடையாக தலையில் சுமந்து சென்று விற்பனையை செய்வதுதான் என்று எனக்குள் ஏற்பட்ட பாதிப்பு, நான் அவ்வாறு​செய்வது என் அம்மாவுக்கு ஏற்படுதும் நஷ்டம் என்றோ அல்லது அந்தபெண்மணிக்கு நான் செய்யும உதவி என்றோ என் உள்ளத்தில் தோன்றியதில்லை. மனதில் சரி என்று பட்டதினால், நான் அந்த பெண்மணி எங்கள் இல்லத்திற்கு விற்பனைகாக வரும்​போதெல்லாம் இவ்வாறு​செய்வேன். ஆனால் ஒவ்வொருமுறையும் அந்த​பெண்மணி எனக்கு அளிக்குமாறு தன் கூடையில் இருந்து தனியாக ஒரு பழத்தினை அளித்துவிட்டு செல்வார் நான் இல்லத்தில் இல்லாவிடினும். அந்த பெண்மணி இன்று உலகத்தில் இருக்கிறாரோ இல்லையோ தெரியாது, ஆனால் அந்த நல்ல உள்ளத்தை என்னால் இன்னும் மறக்கமுடியாத அனுபவம், வாழ்கையில் உழைத்துதான் முன்னேற வேண்டும் என்ற ஒரு நல்ல அனுபவத்தை அவர் மூலம்தெரிந்துகொண்டதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். பயணங்கள் ​தொடரும்.............................



சங்கமித்ரா


1 comment:

Unknown said...

சகோதரரே,

உழைப்பின் மதிப்பு யாரிற்கு இன்று தெரிகிறது, உண்மையாக உழைப்பவனை முட்டாள் என்கிறது இவ்வுலகம்.முதலாளி கூட தன் துதி பாடுபவனை தூக்கி விடும் காலமிது. உண்மையான உழைப்பால் வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ எனக்கு ஒர் மனத்திருப்தி கிடக்கிறது என்பதுதான் உண்மை.

உற்சாகத்துடன் தொடருங்கள்.