
எனது பயணத்தில் நான் இலக்கியவட்டத்திற்காக நூலகபாதையைநோக்கி சென்றதே ஒரு சுகமும் சோகமும் நிறைந்த ஒரு அனுபவம், பொதுவாக நாம் ஒரு தொடரினை எழுதும்போது சிலசமயம் நம் பயணபாதையில் முந்தைய அனுபவத்தின் நிகழ்வுகளை புதிய அனுபவங்களோடுதொடர்புபடுத்தி ஒப்பிட்டு எழுதவேண்டிய நிலையும் ஏற்படும், இந்தநான்காம் பாதையும் அப்படிதான். நான் பள்ளிபருவத்தினை தாண்டும் முன்பு, எனக்கு பள்ளி நண்பர்களை விட நான் வசிக்கும் இட நண்பர்கள் நிறையஉண்டு, அந்தவகையில் என் நண்பன் சீனிவாசமூர்த்தி, மற்றும் சிலர், நாங்கள் எல்லோரும் பள்ளி விடுமுறைகாலங்களில் மிகவும் மகிழ்ச்சியாக சுற்றிதிரிந்த காலங்கள் உண்டு, அப்படிபட்ட காலங்களில், என்னுடைய நண்பனின் அக்கா பத்மா அதிகமாக வாரந்திர கதைநூல்கள் வாங்கி படிப்பார்கள், எங்களை ஒருநாள் கூப்பிட்டு பழைய புத்தககடையில்சென்று கதைநூல்கள் வாங்கிவர பணித்தார், என் நண்பன் அதற்காக அக்காவிடம்வைத்த கோரிக்கை நாங்கள் வாங்கிதந்தால் எங்களுக்கு சினிமாவுக்கு போக காசு தரவேண்டும் என்பதே, அவரும் தருகிறேன் என்றார், நானும் என் நண்பனுடன் சேர்ந்து புத்தகம் வாங்க பழையநூல்கள் விற்கும் கடைக்குசென்றோம், அப்போது என் மனதில் தோன்றியது தான் சிறிய வாடகை நூலகம் அமைக்கும் எண்ணம், நண்பனிடம் என் கருத்தினை முன்வைத்தேன், பணம் சம்பாதிக்கவேண்டும என்ற எண்ணமெல்லாம் கிடையாது, நாம் செலவிடும் நேரத்தினை பயனுள்ளதாகவேண்டும் என்ற ஆவல், அவனும் ஒப்புக்கொள்ள என் இல்லத்தில் எங்களுடைய கனவு நிறைவேறியது, எங்கள் பகுதியில் வசிக்கும் தாய்மார்களுக்கு வீடுசென்று புத்தகங்களைகொடுப்போம், இவ்வாறக எங்கள்பொழுதும் இனிமயாகவும் , எங்கள்செலவுக்கும் பணம் கிடைத்தது, எங்களுடைய மகிழ்ச்சியில் நடந்தது ஒரு வருத்தமான நிகழ்வு, அதுதான் என் நண்பனின் அம்மாவின் உடனடி மறைவு, ஒரு காலைநேரத்தில் உடல் நலகுறைபாடு காரணமாக மருத்துவரிடம் சென்ற அவருக்கு மாரடைப்பு வந்து இறந்துபோனார், அந்த நிகழ்வு எங்களை மிகவும் பாதித்துவிட்டது, அந்நாள் முதல் நாங்கள் நடத்திவந்த நூலகமும் எங்கள்சோகத்தோடுசேர்ந்து முடங்கிவிட்டது, ஆனால் என்னை இந்த நிகழ்வு நூலகபாதையை நோக்கி திரும்பபார்க்க செய்தது, இவ்வாறக என்னுடைய இலக்கியவட்டம் ஆரம்பித்தது ஒரு சோகநிகழ்வோடு, பயணங்களும் இனிய பாதைகளும் தொடரும்..........................
1 comment:
சங்கமித்திரரே,
சோகமும், இனிமையும் கொண்ட வாழ்க்கைப் பயணத்தினை ,அழகாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.
Post a Comment